ஓம் தத் சத்

ஸ்ரீ தண்டபானி அவர்கள் கடந்த 20 வருடங்களாக இறைவனைத்தேடி எல்லாம் இறைமயம் என்று உணர்ந்தவர்.

இவர் ஸ்ரீ பிரம்மானந்த சுவாமிகள் அவர்களின் சீடர் ஆவார். இவர் வேதாந்த ஞானத்தைக் கற்று சுவாமி ஸ்ரீ விஸ்வநாதர் அவர்கள் அருளிய அஹங்காரி சாட்ச்சி யோகத்தை கடைபிடித்து ஞானத்தை பெற்றவர்.

இன்றைய உலகில் மனிதர்கள் பணம், புகழ் மட்டுமே முக்கியம் என்று வாழ்ந்து வருகின்றனர் ஆனால் பணம், புகழ் போன்றவைகள் இருந்தும் நிறைய மனிதர்கள் துன்பத்தில் துடிப்பதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம் இதிலிருந்து நமக்கு கிடைக்கும் அறிவு என்னவென்றால் பணம், புகழ் நமக்கு நிலையான நிம்மதியை தருவதில்லை என்பதை அறிகின்றோம். பணம், புகழ் நமக்கு சில தேவைகளை பூர்த்தி செய்தாலும் இவற்றினால் நமக்கு நிலையான எதையும் சாராத நிம்மதியை தருகின்ற சக்தியில்லை எனவே நமக்கு நிலையான நிம்மதியை ஆன்மீக ஞானத்தினால் மட்டுமே நமக்கு கொடுக்கமுடியும்.

” ஐயோ! அதிசுலபம் ஐயோ! அதிசுலபம் ஆத்மவித்தை அதிசுலபம் என்ற ரமணர் வாக்குப்படி நிறைய ஆன்மீக சாதகர்கள் தன்னை உணர்ந்து ஞானிகளாக திகழ கருவியாக உள்ளார். “